தமிழர்கள் ஓரணியில் திரண்டால் ஜெனிவாவை வெல்லலாம்

21 Views
oliveechu
8
Published on 28 Jan 2021 / In Other

⁣மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தனித்தனியாகவும், குழுக்களாகவும் பிரிந்து நிற்காமல், ஒன்றுபட்டு உழைத்தால், ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என, பிரான்சை தளமாகக் கொண்டு இயங்கும், தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பொன்.நாயகன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மிகவும் முக்கியமான காலகட்டம் ஒன்றில் நாம் நிற்கின்றோம், தமிழர் தாயகத்தில் இருக்கக் கூடிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒரே குரலில் ஜெனிவாவுக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளன. இதற்கு நமது மக்கள் கொடுத்த அழுத்தமே பிரதான காரணமாகும்.
மாறாக புலம்பெயர் தேசத்தில் தனித்தனியாகவும், குழுக்களாகவும் பிரிந்து நின்று செயற்படுவதனை அவதானிக்க முடிகின்றது. இது தவிர்க்கப்பட வேண்டும். எல்லோரும் ஓரணியில் திரண்டு ஜெனிவாவுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதனை செய்யத் தவறினால் வரலாறு உங்கள் மீதான பழியை சுமத்தும். சர்வதேச ஒழுங்கை நமக்கு சாதகமாக கையாள வேண்டும், தவறின் நமது இனத்தின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக மாறுவதனை எவரும் தடுக்க முடியாது என எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா சபையின், மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடர் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் செயற்படும் தமிழ் மக்களின் அமைப்புகள் இன்னும் ஒரு ஒற்றுமையான ஒருங்கிணைவுக்கு வராதது, பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வேளையில்தான் பிரான்சிலிருந்து திரு பொன்.நாயகன் விடுக்கும் கோரிக்கை மக்களின் குரலாக ஒலிக்கின்றது.
[முழுமையான காணொளி இணைக்கப் பட்டுள்ளது]

Show more
0 Comments sort Sort By